சைபீரியாவில் ஹெலிகாப்டர் விபத்தில் 19 பேர் பலி
பிரசுரிக்கப்பட்டது
வடமேற்கு சைபீரியாவில் ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் குறைந்தது 19 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ரஷ்யா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பட மூலாதாரம், Getty Images
நோவி உரெங்கோய் நகர் அருகே ஹெலிகாப்டரின் நொறுங்கி விழுந்த இடத்தில் தேடுதல் மற்றும் மீட்புப்பணிகள் நடந்து வருவதாக அவசர சேவைகளுக்கான அமைச்சகத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
யமால் தீபகற்பத்தில் நடைபெற்ற இந்த ஹெலிகாப்டர் விபத்தில் மூன்று பேர் பிழைத்திருப்பதாக நம்பப்படுகிறது.
அந்த பகுதிகளில் வானிலை மிக மோசமாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.




























