எக்வேடோரியல் கினியா : ஆடம்பர மாளிகை, விலை உயர்ந்த கார்கள் - துணை அதிபரின் ராஜ வாழ்க்கை

பிரசுரிக்கப்பட்டது

எக்வேடோரியல் கினியா அதிபரின் மகன் குறித்த வழக்கு விசாரணையானது பிரான்ஸில் தொடங்கியுள்ளது.

எக்வேடோரியல் கினியா அதிபரின் மகன் தியோடோரின் ஒபியாங்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, எக்வேடோரியல் கினியா அதிபரின் மகன் தியோடோரின் ஒபியாங்

எக்வேடோரியல் கினியாவின் துணை அதிபராக பதவி வகிக்கும் தியோடோரின் ஒபியாங், நாட்டின் பணத்தைக் கொண்டு பாரிஸில் ஆடம்பரமான வாழ்க்கை வாழ்ந்தார் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த விசாரணையின் போது அவர் ஆஜராகவில்லை.

எக்வேடோரியல் கினியா அதிபரின் மகன் தியோடோரின் ஒபியாங்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தன்னுடைய பெண் தோழியுடன் துணை அதிபர்

நீதிமன்றத்தை தான் ஆங்கீகரிக்கவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

அவருடைய உடைமைகளில், 100 மில்லியன் டாலருக்கு அதிகமான மதிப்புள்ள மாளிகையும், மற்றும் புகாட்டி, ஃபெராரி மற்றும் ரோல்ஸ் ராய்ஸ் போன்ற விலை உயர்ந்த கார்களும் அடங்கும்.