மொசூலை மீட்க இராக் படையினருக்கு உதவும் வெளிநாட்டு ராணுவ ஆலோசகர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

பிரசுரிக்கப்பட்டது

வடக்கு இராக் நகரான மொசூலை தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர போராடி வரும் அந்நாட்டு படையினருக்கு உதவிடும் வெளிநாட்டு ராணுவ ஆலோசகர்களின் எண்ணிக்கை மிகப் பெரிய அளவில் அதிகரித்துள்ளது.

மொசூலை மீட்க இராக் படையினருக்கு வெளிநாட்டு உதவிகள் அதிகரிப்பு

பட மூலாதாரம், AYMAN OGHANNA

படக்குறிப்பு, மொசூலை மீட்க இராக் படையினருக்கு வெளிநாட்டு உதவிகள் அதிகரிப்பு

இராக் படையினருக்கு உதவிடும் பெரும்பாலான ராணுவ ஆலோசகர்கள் அமெரிக்காவை சேர்ந்தவர்கள்.

இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில் இருந்து மொசூல் நகரை மீட்டெடுக்க நடந்து வரும் போரில் தாங்கள் புதிய உத்திகளை கையாளப் போவதாக அமெரிக்க ராணுவ ஆலோசகர்கள் தெரிவித்துள்ளனர்.

மொசூலை மீட்க இராக் படையினருக்கு உதவும் வெளிநாட்டு ராணுவ ஆலோசகர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மொசூலை மீட்க இராக் படையினருக்கு உதவும் வெளிநாட்டு ராணுவ ஆலோசகர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

ஆரம்பத்தில் மொசூலில் நடந்த இராக் அரசு தரப்பு தாக்குதல்கள் ஒருங்கிணைப்பு இல்லாமல் நடைபெற்றதாகவும், தற்போது தாக்குதல் நடவடிக்கைள் சிறப்பான முறையில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அமெரிக்கா தலைமையிலான கூட்டணி படையினரின் தளபதியான ஸ்டீவ் டவுன்சென்ட் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, புத்தாண்டுக்குள் மொசூல் நகரை மீட்கும் போராட்டத்தில் தாங்கள் வெற்றி பெறுவோம் என்று இராக் அரசு கணித்திருந்தது.