வடகொரியாவுடன் நட்புறவை விரும்பும் தலைவர் தென் கொரியாவின் புதிய அதிபராக வாய்ப்பு

பிரசுரிக்கப்பட்டது

வடகொரியாவுடன் நட்புக்கரம் நீட்ட விரும்பும் மூன் ஜயே-இனனை தென் கொரிய வாக்காளர்கள் அடுத்த அதிபராக ஒருமனதாக தெரிவு செய்யக்கூடும் என வாக்களிப்புக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் காட்டுகின்றன.

வட கொரியாவோடு அதிக பேச்சுவார்த்தை மேற்கொள்ளும் கொள்கையை மூன் முன்வைக்கிறார்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, வட கொரியாவோடு அதிக பேச்சுவார்த்தை மேற்கொள்ளும் கொள்கையை மூன் முன்வைக்கிறார்

மூன் 41.4 சதவீத வாக்குகள் பெறுவார் என்றும் அவரது போட்டியாளர் ஹொங் ஜூன்-பியோ 23.3 சதவீதமே பெறுவார் என்றும் இந்த கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்படுகிறது.

தற்போதைய தென் கொரிய கொள்கைக்கு மாறாக, வட கொரியாவோடு அதிக பேச்சுவார்த்தை மேற்கொள்ள வேண்டும் என்ற கொள்கையை மூன் கொண்டுள்ளார்.

மூன்

பட மூலாதாரம், Reuters

முன்னாள் தென் கொரிய அதிபர் ஊழல் மோசடியால் பதவி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து, முன்னரே அதிபர் தேர்தல் நடத்த வேண்டியதாயிற்று.

தன்னுடைய நெருங்கிய தோழி நிறுவனங்களில் இருந்து பணம் பறிக்க அனுமதித்ததாக முன்னாள் அதிபர் பார்க் குன் ஹெ மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

மோசமான காலநிலையிலும் தேர்தல் முடிவுகளை அறிய சோலில் ஒன்றுகூடினர்

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு, மோசமான காலநிலையிலும் தேர்தல் முடிவுகளை அறிய சோலில் ஒன்றுகூடினர்

மூன் வெற்றி உறுதியானால், புதன்கிழமை அவர் பதவியேற்கலாம் என்று தெரிகிறது.

மூன்று தொலைக்காட்சி நிலையங்களால் இந்த தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்