நடவுத் திருவிழாவில் எருமை விடும் பந்தயம் நடத்தும் தாய்லாந்து விவசாயிகள்

காணொளிக் குறிப்பு, தாய்லாந்து சோன்புரியில் உள்ள ஒரு நடவு வயலில் நடக்கும் எருமை விடும் திருவிழா
பிரசுரிக்கப்பட்டது

ஆண்டுதோறும் நடக்கும் நடவுத் திருவிழாவை ஒட்டி எருமை விடும் பந்தயங்களை நடத்துகிறார்கள் தாய்லாந்து விவசாயிகள்.

தாய்லாந்து தலைநகர் பாங்காக்குக்கு கிழக்கே உள்ள சோன்புரியில் இத்திருவிழா நடக்கிறது. ஒவ்வொரு ஜோடி எருமையும் ஒரு நுகத்தடியில் பூட்டப்பட்டு, நீர் பாய்ச்சப்பட்ட நிலத்தில் உழுதுகொண்டே செல்லும்படியாக செலுத்தப்படுகின்றன. மாட்டுக்குரிய விவசாயிகள் அம்மாடுகளின் பின்னாலே ஓடுகின்றனர். இப்பந்தயத்தைக் காண பெரும் கூட்டம் கூடுகிறது. தற்போது பெரும்பாலும் உழவு வேலையை டிராக்டர்களே செய்துவிடுவதால் தாய்லாந்தின் விவசாயப் பண்பாட்டில் எருமைகளின் இடத்தைத் தக்கவைப்பதற்காக இப்பந்தயம் நடத்தப்படுவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :