பிபிசி தமிழில் இன்று...பகல் 1 மணி வரை

முதுமையை வென்ற விளையாட்டு வீரர்கள்

பட மூலாதாரம், ALEX ROTAS

பிரசுரிக்கப்பட்டது

இன்று (திங்கட்கிழமை) பிபிசி தமிழில் பிற்பகல் வரை வெளியான செய்திகளில் முக்கியமானவற்றை தொகுத்து வழங்கியுள்ளோம்.

நீட் தேர்வுக்கு தற்காலிக விலக்கு மட்டுமே; குழப்பத்தில் மாணவர்கள்?

நீட் தேர்வு

பட மூலாதாரம், Getty Images

நீட் தேர்வு விவகாரத்தில், தமிழக அரசு முறையான அவசர சட்டத்தை நிறைவேற்றி மத்திய அரசை அணுகினால், இந்த ஒரு ஆண்டிற்கு (நடப்பாண்டு) நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க மத்திய அரசு ஒத்துழைக்கும் என மத்திய இணை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டியளித்துள்ளார்.

line break

மொட்டையடிக்க வந்த மன அழுத்தம் கொண்டவர்: அலங்காரம் செய்து அசத்திய சிகை அலங்கார நிபுணர்

சிகை அலங்கார நிபுணர்

பட மூலாதாரம், KAYLEY OLSSON

மனநிலையில் பாதிப்பிருந்தால் நமக்கு அழகு குறித்த சிந்தனைகள் பெரிதாக வருவதில்லை. அமெரிக்காவைச் சேர்ந்த சிகை அலங்கார நிபுணர் ஒருவர், மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட பதின்ம வயது பெண் ஒருவரின் கதையை பதிவிட, அது சமூக ஊடகத்தில் பெரிதும் பகிரப்பட்டுள்ளது.

line break

வைட்டமின் பி3 உட்கொண்டால் கருச்சிதைவு, பிறப்புக் குறைபாடு வாய்ப்புகள் குறையும் - ஆய்வு

வைட்டமின் பி3

பட மூலாதாரம், Getty Images

வைட்டமின் பி3 உட்கொள்வதால் கருச்சிதைவு, பிறப்புக் குறைபாடுகள் ஏற்படும் வாய்ப்புகள் குறையலாம் என்று எலிகளின் மீது நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

line break

இந்தியாவின் 70-ஆவது சுதந்திர தினம்: பிரிட்டனை பற்றி இந்தியர்கள் என்ன நினைக்கிறார்கள்?

இந்தியாவின் 70-ஆவது சுதந்திர தினம்

பட மூலாதாரம், Getty Images

பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்திலிருந்து இந்தியா சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகளான நிலையில், பிரிட்டன் இந்தியாவிடம் ஒரு மிக நெருக்கமான வர்த்தக உறவை எதிர்பார்க்கிறது. ஆனால், பிரிட்டன் பற்றி நவீன இந்தியர்கள் என்ன நினைக்கிறார்கள்?

line break

முதுமையை வென்ற விளையாட்டு வீரர்கள் (புகைப்படத் தொகுப்பு)

முதுமையை வென்ற விளையாட்டு வீரர்கள்

பட மூலாதாரம், ALEX ROTAS

உலகின் மிக சிறந்த தடகள வீரர்கள் லண்டனில் கொண்டாடப்படும் வேளையில், அவர்களுடைய பழைய சகாக்கள் டென்மார்க்கில் நடைபெற்ற போட்டியை முடித்துவிட்டு ஊர் திரும்புகின்றனர் என்பது வெகு சிலருக்கே தெரியும். ஆனால், இந்த இருதரப்பினரும் தங்களது வயது என்ற விஷயத்தில் மட்டும் முற்றிலும் எதிரெதிராக இருந்தாலும், விளையாட்டின் மீதான ஈடுபாடு, மகிழ்ச்சி மற்றும் மன உறுதி ஆகியவற்றில் ஒருதரப்பினருக்கு மற்றொருவர் சளைத்தவர்களல்ல.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :