பிபிசி தமிழில் இன்று வெளியான முக்கியச் செய்திகள்
பிபிசி தமிழில் இன்று (புதன்கிழமை) வெளியான முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகிறோம்.

பட மூலாதாரம், Getty Images
இந்தியாவின் வர்த்தகத் தலைநகராகக் கருதப்படும் மும்பையில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் சிக்கி இரண்டு குழந்தைகள் உள்பட ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.வெள்ளப் பாதிப்புகள் இல்லாத பகுதிகளில் இருந்த மும்பை வாசிகள் தங்கள் முகவரிகளை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து, #RainHosts என்னும் ஹேஷ் டேக்குகளை உருவாக்கி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட முன்னறிமுகம் இல்லாதவர்களுக்கும் அடைக்கலம் தந்து உதவுகின்றனர்.
செய்தியை படிக்க:ஐவரை பலி வாங்கிய மும்பை வெள்ளம்


பட மூலாதாரம், Getty Images
அமெரிக்காவில் பாரிய நிதி மோசடியோன்றை மேற்கொண்ட பின்னர் இலங்கைக்குத் தப்பி வந்துள்ள அஹமத் பாக்கி எனும் லெபனான் நாட்டைச் சேர்ந்த பிரஜை ஒருவரை உடனடியாக அமெரிக்காவுக்கு நாடு கடத்துமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செய்தியை படிக்க: இலங்கை: லெபனான் நாட்டவரை நாடு கடத்த நீதிமன்றம் உத்தரவு


பட மூலாதாரம், Getty Images
"ஹார்வி" என்ற சூறாவளியால் அமெரிக்காவின் ஹூஸ்டன் நகர் வெள்ளத்தில் மூழ்கியிருக்கும் நிலையில், அந்நகரில் இரவு முதல் காலை வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
செய்தியை படிக்க:ஹார்வி புயல்: ஹூஸ்டனில் ஊரடங்கு உத்தரவு இரவில் அமல்


பட மூலாதாரம், AIADMK
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் திங்கள் கிழமையன்று நடந்த கூட்டத்தில் 77 சட்டமன்ற உறுப்பினர்களே கலந்துகொண்டார்கள் என டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.


பட மூலாதாரம், AFP
போர்க்குற்ற குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக இலங்கை முன்னாள் ராணுவ தளபதி ஜகத் ஜெயசூர்ய மீது பிரேசில் மற்றும் கொலம்பியா ஆகிய தென் அமெரிக்க நாடுகளில் சில மனித உரிமை குழுக்கள் வழக்கு தாக்கல் செய்துள்ளன.


பட மூலாதாரம், KCNA
ஜப்பான் மீது பறந்து சென்ற ஏவுகணைதான் பசிஃபிக் பிராந்தியத்தில் தங்கள் நாடு மேற்கொள்ளவுள்ள ராணுவ நடவடிக்கைகளின் ஆரம்பம் என்று வட கொரியா கூறியுள்ளது.
செய்தியை படிக்க :'இது ஆரம்பம்தான்': ஜப்பான் மீது பறந்த ஏவுகணை பற்றி வட கொரியா


பட மூலாதாரம், Getty Images
ஒரு இஸ்லாமியக் குடும்பத்தின் பராமரிப்பில் இருந்த ஒரு ஐந்து வயது இஸ்லாமியப் பெண் குழந்தை அவள் பிறந்த குடும்ப உறுப்பினர் ஒருவராலேயே பராமரிக்கப்பட வேண்டும் என்று லண்டன் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
செய்தியை படிக்க: இஸ்லாமிய குடும்பத்தில் கிறித்துவக் குழந்தை: குடும்பத்துடன் சேர்த்து வைக்க நீதிமன்றம் உத்தரவு


பட மூலாதாரம், Narinder nanu
மத்திய அரசு திட்டங்களின் பலன்களைப் பெற அவற்றுடன் ஆதார் எண்ணை வரும் செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் இணைக்க வேண்டும் என நிர்ணயித்திருந்த காலக்கெடு வரும் டிசம்பர் 31-ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
செய்தியை படிக்க: ஆதார்: இணைப்பு அவகாசம் டிசம்பர் 31வரை நீட்டிப்பு


பிரிட்டன் ஆட்சியில் இருந்து இந்தியா சுதந்திரம் பெற்று இரு நாடுகளாக பிரிந்ததால் ஏற்பட்ட குழப்பம், அதிர்ச்சி, தொடரும் விளைவுகள் ஆகியவற்றை அலசும் பிபிசி ஆய்வின் 14--ஆவது பாகம் இது.
செய்தியை படிக்க:பாகிஸ்தானில் இருந்த இந்துக்கள் வீட்டின் தற்போதைய நிலை என்ன?

பறக்கும் விமானத்தில் இருந்து நிர்வாணமாக கீழே குதிப்பது பலருக்கும் சங்கடமான ஒன்றாக இருக்கலாம். ஆனால், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த வயலின் இசைக் கலைஞர் கிளென் டோனலிக்கு அது ஒரு பெருமையாக உள்ளது.
செய்தியை படிக்க:விமானத்தில் இருந்து நிர்வாணமாக குதித்த இசைக் கலைஞர்


பட மூலாதாரம், Getty Images
தமிழகத்தில் தற்போது நிலவும் சூழலில் தான் நடவடிக்கை ஏதும் எடுக்க முடியாது என தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யசாகர் தங்களிடம் கூறியதாக இன்று (புதன்கிழமை)அவரைச் சந்தித்த இடதுசாரி மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

































