பிபிசி தமிழில் இன்று வெளியான முக்கியச் செய்திகள்

பிரசுரிக்கப்பட்டது

பிபிசி தமிழில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியான முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகிறோம்.

விண்வெளி

பட மூலாதாரம், SERGEI ILNITSKY/AFP/GETTY IMAGES

சர்வதேச விண்வெளி நிலையத்தில் நீண்ட நாட்கள் தங்கியிருந்து, சாதனை புரிந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை பெக்கி வில்சன் பூமிக்கு திரும்பியுள்ளார்.

line break
நிர்மலா சீதாராமன்

பட மூலாதாரம், ALL INDIA RADIO

இன்று நடந்த மத்திய அமைச்சரவை மறுசீரமைப்பை தொடர்ந்து வர்த்தகத்துறை அமைச்சராக இருந்த நிர்மலா சீதாராமனிற்கு பாதுகாப்புத் துறை அமைச்சகம் வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் நாட்டின் முதல் முழு நேர பாதுகாப்புத் துறை பெண் அமைச்சர் என்ற சிறப்பைப் பெற்றுள்ளார் நிர்மலா சீதாராமன்.

line break
அனிதா

மத்திய அரசு கொண்டுவந்த மருத்துவப் படிப்பிற்கான கட்டாய நீட் நுழைவுத் தேர்வு காரணமாக தற்கொலைசெய்து கொண்டதாக கூறப்படும் மாணவி அனிதாவின் குடும்பத்திற்கு தமிழக அரசு அறிவித்த ரூ.7 லட்சம் நிதியுதவியை அனிதாவின் குடும்பத்தினர் வாங்க மறுத்துள்ளனர்.

line break
மோதி

பட மூலாதாரம், Getty Images

பிரதமர் நரேந்திர மோதி புதிதாக 9 அமைச்சர்களைத் தனது அமைச்சரவையில் சேர்த்துள்ளார். இந்த ஒன்பது புதிய அமைச்சர்களில் நான்கு பேர் ஓய்வு பெற்ற அரசு உயரதிகாரிகள்.

line break
ரொஹிஞ்சா முஸ்லிம்கள்

பட மூலாதாரம், Reuters

மியான்மரில் தீவிரவாதிகளுக்கு எதிரான பிரசாரத்தை அந்நாட்டு ராணுவத்தினர் தொடங்கிய இரண்டு வாரத்திற்கும் குறைவான காலத்திற்குள், 73,000 ரொஹிஞ்சா முஸ்லிம்கள் மியான்மரில் இருந்து வங்கதேசம் சென்றுள்ளதாக ஐ.நாவின் அகதிகளுக்கான அமைப்பு தெரிவித்துள்ளது.

line break
சிறிசேன

பட மூலாதாரம், PMO

இலங்கை முன்னாள் ராணுவ தளபதி உள்ளிட்ட படையினர் மீது கை வைக்க உலகில் எவருக்கும் இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :