மெக்ஸிகோ பூகம்பத்தில் இருநூறுக்கும் அதிகமானோர் பலி

காணொளிக் குறிப்பு, மெக்ஸிகோ பூகம்பத்தில் இருநூறுக்கும் அதிகமானோர் பலி
பிரசுரிக்கப்பட்டது

மெக்ஸிகோவைத் தாக்கிய பெரும் பூகம்பத்தில் உயிர்தப்பியவர்களை மீட்புப் பணியாளர்கள் தொடர்ந்து தேடிவருகின்றனர்.

அந்த நிலநடுக்கத்தில் இருநூறுக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர்.

இறந்தவர்களில் அரைவாசிப்பேர் தலைநகர் மெக்ஸிகோ சிட்டியிலேயே உயிரிழந்தனர்.

ஏழு புள்ளி ஒன்று சக்திகொண்ட அந்த நிலநடுக்கம் காரணமாக அங்கு ஏரளமான கட்டடங்கள் இடிந்து விழுந்தன.

நாட்டின் தென்மேற்கு கரையில் இரு வாரங்களுக்கு முன்னர் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் குறைந்தது தொண்ணூறு பேர் பலியாயினர்.

மூன்று புவித்தகடுகளின் மேலாக மெக்ஸிகோ உள்ளதால் அங்கு நிலநடுக்கங்கள் அடிக்கடி ஏற்படும் சாத்தியங்கள் உள்ளன.

இவை குறித்த பிபிசியின் காணொளி.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :