அமெரிக்க ராக் அண்ட் ரோல் இசைக்கலைஞர் ஃபேட்ஸ் டாமினோ மரணம்

பிரசுரிக்கப்பட்டது

அமெரிக்காவில் 1950கள் மற்றும் 1960களில் ராக் அண்ட் ரோல் இசை உலகில் மிகவும் சக்திவாய்ந்த கலைஞர்களில் ஒருவராகத் திகழ்ந்த ஃபேட்ஸ் டாமினோ, புதனன்று, தனது 89-ஆம் வயதில் காலமானார்.

ஃபேட்ஸ் டாமினோ

பட மூலாதாரம், Clive Limpkin

படக்குறிப்பு, ஃபேட்ஸ் டாமினோ

'எயின்ட் தட் அ ஷேம்', 'புளூபெரி ஹில்' உள்ளிட்ட பாடல்களுக்காக அவர் மிகவும் புகழ் பெற்றார்.

1950களில், எல்விஸ் பிரெஸ்லி தவிர மற்ற அனைத்து பாடகர்களை முந்தும் வகையில் அவரின் பாடல்கள் 65 சுமார் 65 மில்லியன் பதிப்புகள் விற்பனையாகின.

காணொளிக் குறிப்பு, அமெரிக்காவில் அதிகரிக்கும் குழந்தை திருமணங்கள்

அவர் தனியாக பாடி வெளியிட்ட 'தி ஃபேட் மேன் ' பாடல்தான் முதல் ராக் அண்ட் ரோல் பாடல் பதிவு என்றும் சிலர் கூறுகின்றனர்.

லாஸ் வெகாஸில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் எல்விஸ் பிரெஸ்லியால் அறிமுகம் செய்யப்பட்ட இவர் 1960கள் மற்றும் 1970களில் உருவான பாடகர்கள் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தார்.

ஃபேட்ஸ் டாமினோ

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஃபேட்ஸ் டாமினோ

1986இல் ராக் அண்ட் ரோல் 'ஹால் ஆஃப் ஃபேம்' கௌரவம் பெற்ற பாடகர்களில் டாமினோவும் ஒருவர்.

நியூ ஆர்லியன்ஸில் 1928-ஆம் ஆண்டு பிப்ரவரி 26 அன்று பிறந்த இவரது தந்தை ஒரு வயலின் கலைஞர் ஆவார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்