பிபிசி தமிழில். . . மதியம் 1 மணி வரை. . .

பிரசுரிக்கப்பட்டது

பிபிசி தமிழில் மதியம் 1 மணி வரை வெளியான செய்திகளை தொகுத்து வழங்குகிறோம்.

சீனாவைப் பற்றி உங்களுக்குத் தெரியாத தகவல்கள்

பட மூலாதாரம், Getty Images

சீனாவும், ஷி ஜின்பிங்கின் பெயரும் உலகில் மிகவும் பரவலாகப் பேசப்பட்டுவரும் நிலையில் சீனாவைப் பற்றிய 13 விடயங்களை உங்களுக்கு சொல்கிறோம், இவை அனைவருக்கும் தெரிந்திருக்குமா என்பது சந்தேகமே.

Presentational grey line
மறைந்த மன்னர் பூமிபோன் அடூன்யடேட்

பட மூலாதாரம், PORNCHAI KITTIWONGSAKUL/AFP/Getty Images

ஓராண்டுக்கு முன்பு இறந்த தாய்லாந்து மன்னர் பூமிபோல் அதுல்யதேஜ்ஜின், ஐந்து நாள் இறுதிசடங்கு புதன்கிழமை தொடங்கியது. தாய்லாந்து மன்னர், 2016ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம், தனது 88 வயதில் இயற்கை எய்தினார். மன்னரின் உடலுக்கு, அவரின் மகனும், அடுத்த மன்னருமான மகா வஜ்ரலாங்கோர்ன் எரியூட்டவுள்ளார்.

Presentational grey line
காணொளிக் குறிப்பு, 93 வயதில் நீச்சலில் உலக சாதனை படைக்கும் பெண்

பிரேசிலை சேர்ந்த 93 வயதாகும் நோரா ரோநாய் என்னும் இப்பெண், தனது வாழ்க்கையில் பாலின பாகுபாட்டை எதிர்கொண்டதாகவும், ஆனால் அது தனது இலக்குகளை அடைவதில் பாதிப்புகளை ஏற்படுத்தாத வகையில் செயல்பட்டதாகவும் கூறுகிறார்.

Presentational grey line
பாதிக்கப்பட்டவர்

ஆபாச செய்தி மற்றும் புகைப்படங்களில் தனது புகைப்படம் திணிக்கப்பட்டு அவை சமூக வலைதளங்களில் பகிரப்பட்டதால் தனது வாழ்வு பாழாகியிருப்பதாக ஓர் இளம்பெண் வேதனை தெரிவித்துள்ளார்.

Presentational grey line
பாரிஸைவிட பணக்கார நகரம் டெல்லி

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவின் இடைக்கால வரலாற்றை பார்ப்பதற்கு பல்வேறுபட்ட அணுகுமுறைகள் உள்ளன. அதில் ஒன்று இடதுசாரி வரலாற்றாளர்கள். அவர்களின் கருத்துப்படி, இந்தியாவின் இடைக்கால வரலாறு பல்வேறு விதங்களில் முக்கியத்துவம் வாய்ந்தது. இடைக்கால காலப்பகுதியில் விரைவான நகரமயமாக்கல், கட்டிடக்கலை சிறப்பு முக்கியத்துவம் பெற்றது மற்றும் மையப்படுத்தப்பட்ட ஆட்சி முறை உருவாக்கப்பட்டது என்பது அவர்களின் நம்பிக்கை.

Presentational grey line
பேனர் வைப்பதைத் தடைசெய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, (கோப்புப் படம்)

தமிழ்நாட்டில் உயிருடன் இருப்பவர்களின் படங்களுடன் கூடிய பேனர்கள், ஃப்ளெக்ஸ் போர்டுகள் மற்றும் பதாகைகளை வைப்பதற்கு தடைசெய்யும் வகையில் ஏற்கனவே உள்ள சட்ட விதிகளில் திருத்தத்தை மேற்கொள்ளுமாறு தமிழக அரசிற்கு சென்னை உயர் நீதிமன்றம் செவ்வாயன்று உத்தரவிட்டது.

Presentational grey line
திருமாவளவன்

தம்மை வளைக்க முடியவில்லை என்ற ஆத்திரத்தில் தம்மைப் பற்றி பாஜகவினர் அபாண்டமாகப் பேசுவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் பிபிசியிடம் தெரிவித்தார்.

Presentational grey line

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்