பிபிசி தமிழில். . . இன்று மாலை 6 மணி வரை...

பிரசுரிக்கப்பட்டது

பிபிசி தமிழில் இன்று (செவ்வாய்கிழமை) மாலை 6 மணி வரை வெளியான முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகிறோம்.

அம்பத்தூர்

பட மூலாதாரம், NAVEEN

வடகிழக்கு பருவமழை தொடங்கிய இரண்டு நாட்களில் பரவலாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வெள்ள அபாய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அரசு அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Presentational grey line
காணொளிக் குறிப்பு, ஷேக்குகளுக்கு விடுமுறை மனைவிகளாக விற்கப்பட்ட இந்திய சிறுமிகள்

மத்திய கிழக்கு நாடுகளில் வசிக்கக்கூடிய வயதான அரபு ஷேக் ஆண்கள், ஹைதராபாத்தில் உள்ள ஏழை முஸ்லீம் குடும்பங்களை சேர்ந்த சிறுமிகளை பணம் கொடுத்து திருமணம் செய்துகொண்டு, பிறகு அவர்களைக் கைவிட்டுவிடும் கொடூரம் நடந்து வருகிறது. ஷேக் ஒருவருக்கு 25,000 ரூபாய்க்கு விற்கப்பட்ட சிறுமியை பற்றிய காணொளி.

Presentational grey line
அகதிகள்

பட மூலாதாரம், Getty Images

ஆஸ்திரேலியாவினால் பப்புவா நியூ கினியாவில் (PNG) நடத்தப்படும் அகதிகள் தடுப்பு முகாம் மூடப்படுவதையடுத்து அகதிகளை வெளியேற்றுவதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கை அங்கு தொடங்கியுள்ளது.

Presentational grey line
விமானம்

பட மூலாதாரம், Getty Images

ஐதராபாத்தில் விமானம் ஒன்றின் கதவு, அது வானில் பறந்துகொண்டிருந்தபோதே கழன்று ஒரு வீட்டின் மாடியில் விழுந்தது. இந்த விபத்தில் யாருக்கும் காயமேற்படவில்லை.

Presentational grey line
இலங்கை

பகுதியை பிரித்து புதிய உள்ளுராட்சி சபைகளை ஏற்படுத்துவது தொடர்பாக முஸ்லிம்களுக்கிடையில் முரண்பாடு தோன்றியுள்ளது.

Presentational grey line
பேஸ்புக்

பட மூலாதாரம், AFP/GETTY IMAGES

ரஷியாவை மையமாக கொண்டு இயங்கியவர்கள் பதிவிட்ட, பேஸ்புக் பதிவுகள் 126 மில்லியன் மக்களை சென்று சேர்ந்துள்ளதாக பேஸ்புக் தெரிவித்துள்ளது.

Presentational grey line
டிரம்பின் பிரசார ஆலோசகர்

பட மூலாதாரம், TWITTER/@GEORGEPAPA19

ரஷியர்களுடனான சந்திப்பு எப்போது நடந்தது என்பது குறித்து, எஃப்.பி.ஐயிடம், அதிபர் டிரம்பின் பிரசார ஆலோசகர் பொய் கூறியது தெரியவந்துள்ளது.

Presentational grey line
சோலார் சூட்கேஸ்

உள்ளூர் தாதி ஹிமாஷிரிஷுக்கு சோலார் சூட்கேஸ் ஒரு உயிர் பாதுகாப்பு சாதனம்.தனது சுகாதார மையத்தின் மின்சார பிரச்சினைகளுக்கு சோலார் மூலம் தீர்வு கண்டிருக்கிறார்.

Presentational grey line
காணொளிக் குறிப்பு, 300 வருட ஆல மரத்திற்காக நிலத்தை விட்டுத்தரும் விவசாயிகள்

பஞ்சாபில் 300 வருடம் பழமையான ஆல மரத்தை பாதுகாப்பதற்காக, தங்களது சொந்த நிலங்களை விட்டுக்கொடுக்கும் விவசாயிகள் பற்றிய காணொளி.

Presentational grey line
இந்திரா காந்தி

பட மூலாதாரம், Getty Images

தனது முகத்தை மறைப்பதற்காக இந்திரா வலது கையை தூக்கினார், அதற்குள் பியந்த் சிங், இந்திராவின் பக்கவாட்டு மற்றும் மார்பில் இரண்டு முறை சுட்டார். துப்பாக்கியில் இருந்து சீறிப்பாய்ந்த தோட்டாக்கள் இந்திரா காந்தியின் மார்பு, பக்கவாட்டுப்பகுதி மற்றும் இடுப்புக்குள் ஊடுருவின.

Presentational grey line
காணொளிக் குறிப்பு, நேபாளத்தில் தாய், சேயை காப்பாற்றும் சோலார் சூட்கேஸ்

நேபாளத்தில் அன்றாடம் மின்சார வெட்டு ஏற்படுகிறது. கிராமப்புறங்களில் வசிக்கும் நால்வரில் ஒருவருக்கு மின்சாரம் கிடைப்பதில்லை. இதனால், மின்சாரமோ நிலையான வெளிச்சமோ இல்லாதபோது நடந்த பிரசவங்களில் சிக்கல்கள் ஏற்பட்டதோடு, உயிரிழப்புகளும் ஏற்பட்டன. இதற்கான தீர்வாக சூரிய ஒளி சூட்கேஸை கண்டுபித்தார் மருத்துவர் லாரா ஸ்டாசெல்.

Presentational grey line

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :