பிபிசி தமிழில் இன்று...
பிபிசி தமிழில் இன்று வெளியான முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகிறோம்.
சீனா செல்வதற்கு முன் என்ன பேசினார் டிரம்ப்?

பட மூலாதாரம், AFP
தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது டிரம்ப், சீனாவை பண மோசடியில் ஈடுபடுபவர்கள் என்றும், அமெரிக்காவின் வேலை வாய்ப்புகளை திருடுபவர்கள் என்றும் விமர்சித்து இருந்தார்.
செய்தியை படிக்க: சீனா செல்வதற்கு முன் என்ன பேசினார் டிரம்ப்?

பணமதிப்பு நீக்கம்: கறுப்பு தினம் அனுசரித்த எதிர்க்கட்சிகள்

இரண்டு நாட்களுக்கு முன்னர் பிரதமர் மோதி சென்னை வந்திருந்த சமயத்தில் திமுக தலைவர் கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்த காரணத்தால் திமுக பணமதிப்பிழப்புற்கு எதிரான போராட்டத்தை நடத்தாது என்று பலர் தெரிவித்தனர். ஆனால் திமுக தனது கருத்தை மாற்றிக்கொள்ளவில்லை என்று ஸ்டாலின் கூறினார்.

'பற்ற வைக்கப்பட்ட தீயுடன் ஓடும்' யானைகளின் புகைப்படத்திற்கு சர்வதேச விருது

பட மூலாதாரம், BIPLAB HAZRA/SANCTUARY WILDLIFE PHOTOGRAPHY AWARDS
தங்களுக்கு தீ வைத்த ஒரு குழுவிடமிருந்து தப்பியோடும் இரண்டு யானைகளின் புகைப்படம் வனவிலங்கு புகைப்பட போட்டியொன்றில் முதன்மையான பரிசை வென்றுள்ளது.

நச்சுப் புகையால் ஸ்தம்பித்த டெல்லி (புகைப்படத் தொகுப்பு)

பட மூலாதாரம், Getty Images
இந்திய தலைநகர் டெல்லியில் நச்சுப்புகையின் தீவிரம் அதிகரித்துள்ளது. அதுகுறித்த புகைப்படத் தொகுப்பு.
புகைப்படங்களை காண : நச்சுப் புகையால் ஸ்தம்பித்த டெல்லி (புகைப்படத் தொகுப்பு)

நச்சுப் புகையால் உத்தர பிரதேசத்தில் அடுத்தடுத்து மோதிக் கொண்ட வாகனங்கள்

பட மூலாதாரம், Twitter
இந்திய தலைநகர் டெல்லியில் கடந்த சில தினங்களாக நச்சுப் புகையின் அளவு, இதன்காரணமாக உலக சுகாதார நிறுவனம் பரிந்துரை செய்திருந்த அளவைவிட 30 மடங்கு அதிகமான காற்று மாசுபாடு நிலவி வருகிறது.

எங்களை சீண்ட வேண்டாம்`: வடகொரியாவிற்கு டிரம்ப் எச்சரிக்கை

பட மூலாதாரம், Chung Sung -Jun/Getty Images
`எங்களை குறைத்து மதிப்பிடாதீர்கள். எங்களை சீண்டவேண்டாம்` என்று கூறியதோடு, வடகொரியாவில் வாழ்க்கை என்பது `இருண்ட கற்பனை` என்றும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
செய்தியை படிக்க: `எங்களை சீண்ட வேண்டாம்`: வடகொரியாவிற்கு டிரம்ப் எச்சரிக்கை

ரஷ்ய புரட்சியின் அரிய புகைப்படங்கள்!

பட மூலாதாரம், Keystone
ரஷ்யப் புரட்சியின் நூற்றாண்டு அனுசரிக்கப்பட்டுவரும் நிலையில், புரட்சி வெடித்ததையடுத்து மாஸ்கோ மற்றும் பெட்ரோகிராட் ஆகிய நகரங்களில் நடைபெற்ற போராட்டங்களைப் புகைப்படங்கள் வாயிலாகத் தொகுத்து வழங்கியுள்ளோம்.
புகைப்படங்களை காண : வாக்குரிமைக்காக வீதியில் போராடிய பெண்கள்: ரஷ்ய புரட்சியின் அரிய புகைப்படங்கள்!

இலங்கை: 100 வயதை கடந்த முதியோருக்கு ரூ. 5000 சிறப்பு உதவித்தொகை

இலங்கையில் நூறு வயதை கடந்த முதியோர்களுக்கு மாதாந்திர சிறப்பு உதவித்தொகை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
செய்தியை படிக்க: இலங்கை: 100 வயதை கடந்த முதியோருக்கு ரூ. 5000 சிறப்பு உதவித்தொகை

'தங்கமுலாம்' சிறையாக மாறிய சொகுசு ஹோட்டல்

பட மூலாதாரம், Getty Images
அதிபர்கள், பிரதமர்கள் மற்றும் முக்கிய நபர்கள் உயர்வகுப்பு சங்கிலி ஹோட்டல்களான ரிட்ஸ்-கார்ல்டன் ஹோட்டலில் தங்குவார்கள். பணக்காரர்களின் இரண்டாவது வீடு போல இந்த ஹோட்டல்கள் இருக்கிறது.
செய்தியை படிக்க: செளதி இளவரசர்களுக்காக 'தங்கமுலாம்' சிறையாக மாறிய சொகுசு ஹோட்டல்

ஏமனில் பேரழிவு நிலையை எதிர்கொண்டுள்ள லட்சக்கணக்கான உயிர்கள்

பட மூலாதாரம், Getty Images
உயிர் காக்கும் உதவிகளை நம்பியிருக்கும் லட்சக்கணக்கான உயிர்களின் நிலை பேரழிவு நிலைமையில் இருப்பதாக ஐ.நா மற்றும் செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது.
செய்தியை படிக்க: ஏமனில் பேரழிவு நிலையை எதிர்கொண்டுள்ள லட்சக்கணக்கான உயிர்கள்

தனிமைப்படும் அமெரிக்கா

பட மூலாதாரம், Getty Images
ஜூன் மாதம், ஒப்பந்தத்தில் இருந்து பின்வாங்கிக்கொள்வதாக தெரிவித்த அமெரிக்கா, ஒப்பந்தத்தில் உள்ள விதிகள் 2020வரை அவ்வாறு செய்ய முடியாது என கூறுவதால் விலக முடியவில்லை என்று கூறியது.

தனது நிர்வாணப் படத்தை தானே வெளியிட்ட பாடகி

பட மூலாதாரம், Getty Images
தனக்கு என்னென்ன பிடிக்கும் உள்ளிட்ட விடயங்களை வெளிப்படுத்தாமல் தனது வாழ்க்கையை ரகசியமானதாக வைத்திருப்பதற்காக அவர் அறியப்பட்டவர்.
செய்தியை படிக்க: தனது நிர்வாணப் படத்தை தானே வெளியிட்ட பாடகி

இந்தியாவில் அதிகபட்ச உயிரிழப்பை ஏற்படுத்தும் மின்னலின் வடிவத்திற்கான காரணமென்ன?
பிளக்கும் மின்னலுக்கு குறிப்பிட்ட வடிவமுள்ளது என்பது நமக்கு தெரிந்ததே. ஆனால், அதற்கான காரணமென்ன என்ற கேள்விக்கான விடையை அளிக்கிறது இந்த காணொளி.

ஆபத்தை எதிர்கொள்ளும் புதிய வகை ஒராங்குட்டான் இனம்
தற்போது உலகில் வெறும் 800 ஒராங்குட்டான்கள் மட்டுமே எஞ்சி இருப்பதால் அவை முற்றிலும் அரிதான இனங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.

வரிகளை தவிர்க்க ஆப்பிள் பயன்படுத்திய ரகசிய 'பதுங்குகுழி'

பட மூலாதாரம், Getty Images
வரிச்சலுகைக்காக தீவிரமாக இயங்கி வந்ததால் சர்ச்சைக்குரிய அயர்லாந்து நாட்டு வரிவிதிப்பு நடைமுறைகள் தொடர்பாக 2013-இல் கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதை ஆப்பிள் நிறுவனம் எவ்வாறு தவிர்த்தது என்பதை இந்த ஆவணங்கள் வெளிக்காட்டியுள்ளன.
செய்தியை படிக்க: வரிகளை தவிர்க்க ஆப்பிள் பயன்படுத்திய ரகசிய 'பதுங்குகுழி'

பண மதிப்பிழப்பு : 'தீவிரவாதிகளின் கூண்டுகள் காலியாகிவிட்டது'

பட மூலாதாரம், KEVIN FRAYER
இந்த அறிவிப்பின் மூலம் இந்தத் தலைமுறை, "பண மதிப்பிழப்பு" என்ற ஒரு புதிய சொல்லாடலை முதல் முதலில் கேட்கிறது. இந்தக் கொள்கை முடிவு நடைமுறைக்கு வந்து இன்றோடு ஒரு வருடம் முடிவடைகிறது.
செய்தியை படிக்க: பண மதிப்பிழப்பு : 'தீவிரவாதிகளின் கூண்டுகள் காலியாகிவிட்டது'

தேர்தலின் முடிவை மாற்றுமா குரங்குகள்?

மாநிலத்தில் ஆளும் கட்சியான காங்கிரசும், எதிர்கட்சியான பாரதிய ஜனதா கட்சியும் குரங்குகளின் பிரச்சனையை தீர்ப்பதாக வாக்குறுதிகளை அளித்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.
செய்தியை படிக்க: தேர்தலின் முடிவை மாற்றுமா குரங்குகள்?

இந்த பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் சாமானிய மக்கள் பெற்றதும், இழந்ததும்
இந்திய அரசு 1000, 500 ரூபாய் நோட்டுக்களை மதிப்பு நீக்கி நடவடிக்கை எடுத்து, இன்றுடன் (நவம்பர் 8) ஓராண்டாகிறது. இந்நிலையில் இந்த பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் சாமானிய மக்கள் பெற்றதும், இழந்ததும் என்ன?

அரசியல் களத்தில் கமல்ஹாசன்: சாதிப்பாரா?

பட மூலாதாரம், Getty Images
கமல்ஹாசனுக்கு அரசியல் குறித்த அபிலாஷைகள் இருப்பது தெரிய ஆரம்பித்தவுடன், அ.தி.மு.கவும் பாரதீய ஜனதாக் கட்சியும்தான் அதனைக் கடுமையாக எதிர்க்க ஆரம்பித்தன.
செய்தியை படிக்க: அரசியல் களத்தில் கமல்ஹாசன்: சாதிப்பாரா?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



































