பிபிசி தமிழில் இன்று..
பிபிசி தமிழில் இன்று வெளியான முக்கிய செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.
குஜராத் மாதிரி வளர்ச்சி?

பட மூலாதாரம், Getty Images
`குஜராத் மாதிரி வளர்ச்சி` என்ற வாசகத்தை, பா.ஜ. க விவரித்த கதைகளை முறியடிக்க முடியாமல் திணறினர். ஆனால், இந்த கதைகள் சமூக ஊடக இளைஞர்களால் முறியடிக்கப்பட்டுள்ளது.
செய்தியைப் படிக்க: குஜராத் மாதிரி வளர்ச்சி பைத்தியகாரத்தனமான வளர்ச்சியா? - வைரலான ஹாஷ்டாக்

மாணவி கூட்டு பாலியல் வல்லுறவு

பட மூலாதாரம், Getty Images
17 வயது மாணவி ஒருவரை கடத்தி, கூட்டு பாலியல் வல்லுறவு செய்தது தொடர்பாக 4 பேரை இந்தியாவின் தெற்கில் அமைந்துள்ள பெங்களூரு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
செய்தியைப் படிக்க: பெங்களூரு: 17 வயது மாணவியை கூட்டு பாலியல் வல்லுறவு செய்ததாக 4 பேர் கைது

குடும்பத்தை இழந்த சிரியாவாசியின் துயரக்கதை
அங்கு நடந்த தாக்குதல்களால் ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்துள்ளனர். அப்படி, வடக்கு ரக்கா நகரை விட்டு வெளியேறி பாதிக்கப்பட்டவர்களில் உறவுகளை இழந்த அஹ்மத் என்ற தந்தையிடம் பேசியது பிபிசி.

குடும்பத்திற்கு உதவ திருடிய சிறுவன்

பட மூலாதாரம், Jacob Rayan
அவருடைய அம்மா உடல்நிலை சரியில்லாமல் படுத்தபடுக்கை ஆனபோது, வில்லியம் அவநம்பிக்கையில் இருந்தார். எப்படியாவது இந்த வறுமையை, இந்த துயரத்தை வென்றெடுக்க வேண்டும் என்று முடிவு செய்தார்.
செய்தியைப் படிக்க: குடும்பத்திற்கு உதவ பேருந்தை திருடிய 13 வயது சிறுவன்!

வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்ட ரோஹிஞ்சா பெண்கள்

பட மூலாதாரம், Getty Images
மியான்மரின் ரகைன் மாகாணத்தில் உள்ள ரோஹிஞ்சா முஸ்லிம்களுக்கு எதிரான இன சுத்திகரிப்பின்போது, ரோஹிஞ்சா பெண்கள் மற்றும் சிறுமிகள் பர்மிய காவல் படைகளால் பரவலாக பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டதாக ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
செய்தியைப் படிக்க: கூட்டு பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டதாக ரோஹிஞ்சா பெண்கள் வேதனை

யார் இந்தராபர்ட் முகாபே?
ஜிம்பாப்வேயின் விடுதலைப் போராட்டத்தை நடத்தி, சிறை சென்ற பின்னணியுடைய ராபர்ட் முகாபே, ஆட்சிக்கு வந்த பிறகு அதிகாரத்தை தமது இரும்புப் பிடிக்குள் வைத்திருந்தார். அவரது ஆட்சியில் எழுத்தறிவில் தலைநிமிர்ந்த ஜிம்பாப்வே, பொருளாதாரத்தில் வீழ்ந்தது.

ஏலத்தில் சாதனை படைத்த ஓவியம்

பட மூலாதாரம், Christie's
லியோனார்டோ டாவின்சியால் வரையப்பட்டது என்று நம்பப்படும் 500 ஆண்டுகள் பழமையான இயேசுநாதர் ஓவியம் ஒன்று நியூயார்கில் நடந்த ஏலத்தில் 450 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு விற்பனையாகி சாதனை படைத்துள்ளது.
செய்தியைப் படிக்க: ஏலத்தில் சாதனை படைத்த லியோனார்டோ டாவின்சி வரைந்த 'இயேசுநாதர்' ஓவியம்

பூனைகளின் ரட்சகர்கள்
மரம் ஏறத் தெரியும் இந்தப் பூனைகளுக்கு இறங்கத் தெரியவில்லை. அமெரிக்காவின் சியாட்டிலில் பெரிய மரங்களில் ஏறி சிக்கி கொள்ளும் பூனைகளை மீட்டு கொடுப்பதில் மனநிறைவு காணும் இரட்டையர் பற்றிய காணொளி.

தென்னிந்திய நடிகர்களின் கலகக் குரல்

பட மூலாதாரம், Getty Images
எந்தக் கட்டுரையும் விளக்க முடியாத அளவிற்கு வட இந்தியா மற்றும் தென் இந்தியாவிற்கு இடையிலான கலாசார வேறுபாட்டை சமீபத்தில் நடந்த இரண்டு நிகழ்வுகள் நமக்கு திறம்பட வரையறுத்துக் காட்டியுள்ளன.
செய்தியைப் படிக்க: 'தென்னிந்திய நடிகர்களின் போர்க் குணமும், மண்டியிடும் வட இந்திய நடிகர்களும்'

தாயுடன் சேய் இணைந்த தருணம்
மஹாராஷ்டிர மாநிலத்திலுள்ள கரும்பு வயல்களில் இந்த சிறுத்தை குட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த வயல்வெளியில்தான் குட்டிகளை தாய் சிறுத்தை பெற்றெடுத்துள்ளது. பிறகு, உணவுத் தேடி அது வெளியில் சென்றுள்ளது.

விடுதலைக்குப் பின்னும் உதவிய இந்திரா

பட மூலாதாரம், Getty Images
இந்திரா காந்தியின் நூற்றாண்டு இம்மாதம் அனுசரிக்கப்படுகிறது. வங்கதேச விடுதலையில் ஆற்றிய அளப்பரிய பங்கை கூறுவது இப்போது முக்கியமானது.
செய்தியைப் படிக்க: வங்கதேசம்: விடுதலைக்குப் பின்னும் இந்திரா உதவியது எப்படி?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்




































