பிபிசி தமிழில் இன்று...
பிபிசி தமிழில் இன்று வெளியான முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகிறோம்.

இலங்கை அணிக்கு எதிராக இந்தியா விளையாடும் இரண்டாவது மற்றும் மூன்றாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ள 14 பேர் கொண்ட வீரர்கள் அடங்கிய பட்டியலில் தமிழக வீரர் விஜய் சங்கர் இடம்பெற்றுள்ளார்.


பட மூலாதாரம், AFP
ஜிம்பாப்வேயில் நீண்டகாலம் அதிபராக இருந்த ராபர்ட் முகாபேவினால் துணை அதிபர் பதவியில் இருந்து இருவாரங்கள் முன்பு நீக்கப்பட்ட எமர்சன் முனங்காக்வா, அந்நாட்டின் புதிய அதிபராக சில மணிநேரங்களில் பதவியேற்கக்கூடும் என்று ஆளும் கட்சி தெரிவித்துள்ளது.


அதிமுகவின் இரு அணிகள் இணைந்தாலும் கட்சிக்குள் பிரச்சனை நீடித்து வருவதாக பரவலாக பேசப்பட்ட விடயம் தற்போது அக்கட்சியின் மாநிலங்களவை எம்பி மைத்ரேயனின் முகநூல் பதிவுகள் மூலம் வெளிப்பட்டுள்ளது.


குஜராத் சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் நடைபெறவுள்ள நிலையில் அம்மாநிலத்தில் நடைபெற்ற கலவரத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களின் ஓட்டு யாருக்கு என்பதை விவரிக்கிறது இந்த கட்டுரை.


பிபிசி வட கொரியா ராணுவத்திலிருந்து தப்பி அண்டை நாடுகளில் அடைக்கலமான லீ சோ இயோனிடமும் வேறு சிலரிடமும் நேர்காணல் எடுத்தது. அதன் தொகுப்பு.


வலதுசாரி இந்து அமைப்பைச் சேர்ந்தவர்களும், சாதிய குழுக்களும் நாடெங்கும் பத்மாவதி திரைப்பட வெளியீட்டுக்கு எதிராக போராடி வருகிறார்கள்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்
































