ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள்

பிரசுரிக்கப்பட்டது

கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம்.

எதிர்கட்சி தலைவர் விடுதலை

அலெக்சி நவால்னி

பட மூலாதாரம், Getty Images

ரஷ்யாவின் எதிர்கட்சி தலைவரான அலெக்சி நவால்னி விடுதலை செய்யப்பட்டார். தேர்தலை புறக்கணிக்கச் சொல்லும் ஓர் ஊர்வலத்தில் கலந்துக் கொண்டதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார். அவர் மீது வழக்குகள் எதுவும் பதியப்படவில்லை என்று அவரது வழக்கறிஞர் கூறியுள்ளார்.

Presentational grey line

தொழிலதிபர் மரணம்

ஐகே

பட மூலாதாரம், Ikea/Paul Barendregt

உலகம் முழுவதும் பரவி இருக்கும் ஐகே (Ikea)மரசாமான் தொடர் நிறுவனத்தின் அதிபர் இங்வர் காம்ப்ரெட் தனது 91 ஆம் வயதில் உயிரிழந்தார். இதனை அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இங்வர் 20 ஆம் நூற்றாண்டின் மிகச் சிறந்த தொழில் முனைவர்களில் ஒருவர் என்று குறிப்பிட்டுள்ளது.

Presentational grey line

ட்விட்டர் போலி கணக்குகள்

ட்விட்டர்

பட மூலாதாரம், Getty Images

சமூக ஊடகமான ட்விட்டரில் இயங்குபவர்களை, அவர்களது ட்விட்டர் கணக்கில் பின் தொடர்வதற்கென போலியான தானியங்கி ட்விட்டர் கணக்குகளை தொடங்கி அதனை விற்ற நிறுவனத்தை விசாரிக்க அமெரிக்க நீதித் துறை உத்தரவிட்டுள்ளது.

Presentational grey line

ஏமன் பிரிவினைவாதிகள்

ஏமன் பிரிவினைவாதிகள்

பட மூலாதாரம், EPA

ஏமன் அரசு படைகளுடனான தீவிர சண்டைகளுக்கு இடையே தெற்கு ஏமனில் உள்ள பிரிவினைவாதிகள், அடன் நகரத்தில் உள்ள அரசு கட்டடங்களை கைபற்றி உள்ளனர்.கிளர்ச்சி படைகள் ஏமன் தலைநகரான சனாவை கைபற்றியதை அடுத்து, நாட்டின் அதிபர் மன்சூர் ஹதியின் தற்காலிக நிர்வாக தளமாக அடன் நகர் இருந்தது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: