சுதந்திர குப்பைத்தொட்டி: சமூக ஊடகங்கள்

சமூக ஊடகங்கள்
பிரசுரிக்கப்பட்டது
மேலதிக தகவலுக்கு கீழே படியுங்கள் அல்லது
அடுத்ததை தேர்ந்தெடுக்க
News image

ஆசியாவில், ஃபேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் தொடங்கி வெய்போ, வீசேட் மற்றும் காகாவ்ஸ்டோரி வரையான சமூக ஊடகங்களை உலகிலுள்ள மக்களில் பாதி பேர் இப்போது பயன்படுத்தி வருகின்றனர்.

மேற்குலக நாடுகள் மற்றும் வட ஐரோப்பாவில், பத்தில் 9 பேருக்கு அதிகமானோர் இந்த வலைபின்னல்களில் ஏதாவது ஒன்றில் பயனர்களாக இருக்கின்றனர்.

நண்பர்கள் மற்றும் பிரபலங்களை பின்பற்றுவதும், அவர்களின் வாழ்க்கையோடு நமது வாழ்க்கையை ஒப்பிட்டு பார்ப்பதும் நமக்கு துன்பத்தை தரலாம்.

சமூக ஊடகங்களை அதிகமாக பயன்படுத்துவோர் கவலை, மன அழுத்தம் உள்பட மோசமான மனநலம் கொண்டிருப்பதாக ஆய்வு சுட்டுகிறது.

தங்களின் தோற்றத்தில் அதிக கவனம் செலுத்த சமூக ஊடகங்கள் காரணமாக இருப்பதாக இளம் பெண்கள் தெரிவிக்கின்றனர்.

தாங்கள் ஆன்லைனில் இருக்கின்றபோது, அவர்களின் தோற்றமே மிகவும் முக்கியம் என எண்ணுவதாக 7 முதல் 10 வயது வரையான சிறுமியரில் மூன்றில் ஒரு பகுதியினர் கூறுவதாக சிறுமியர் வழிகாட்டும் அமைப்பால் நடத்தப்பட்ட ஆய்வு தெரிவிக்கிறது. இதில் 25 சதவீதத்தினர் ஆன்லைனில் அவர்கள் மிகவும் நன்றாக தோன்ற வேண்டுமென நினைப்பதாக கூறியுள்ளனர்.

பட்டியலிலுள்ள ஒன்றை தேர்ந்தெடுத்து, அது எவ்வாறு ஒடுக்குமுறையை பறைசாற்றுகிறது என்பதை அறியுங்கள்.

  • ஒப்பனை

    "ஆண்கள் ஒப்பனை இல்லாமல் வீட்டிலிருந்து கிளம்புவதை வைத்து எடை போடப்படுவதில்லை."

    மேலும் படிக்க ஒப்பனை
  • அசௌகரியமான பேஷன்

    "மக்கள் ஏன் அவற்றை அணிகிறார்கள் என்று எனக்கு புரியவில்லை. வலியை உண்டாக்கக்கூடிய அது உங்களது உடலுக்கு நிரந்தர பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடியது."

    மேலும் படிக்க அசௌகரியமான பேஷன்
  • வீட்டு சமையல்

    "சமையலறை பெண்களுக்கு மட்டுமானது என்ற கருத்தை தொடர்ந்து கேட்டு வெறுப்படைந்துவிட்டேன்" - எம்மா

    மேலும் படிக்க வீட்டு சமையல்
  • வீட்டு வேலைகள்

    "சமத்துவம் என்பது குடும்பத்திலிருந்துதான் ஆரம்பிக்கிறது. ஆண்களே! அதை புரிந்துகொண்டு வீட்டை சுத்தப்படுத்த தொடங்குங்கள்."

    மேலும் படிக்க வீட்டு வேலைகள்
  • பெண்களின் மார்புக் கச்சு

    "அது அணிந்தால்தான் நான் ‘அழகாக' இருப்பேன் என்று கூறி வற்புறுத்த கூடாது. அது இல்லாமலே நான் அழகானவள், புத்தியசாலியானவள்." - லிசா

    மேலும் படிக்க பெண்களின் மார்புக் கச்சு
  • பிரபலங்களின் கலாச்சாரம்

    "அனைத்து மாடல்களும் ஒரே உடல் வடிவுடன், பரிதாபகரமான இருப்பதை பார்த்து சலித்துவிட்டது" - வெண்டி

    மேலும் படிக்க பிரபலங்களின் கலாச்சாரம்
  • திருமணம்

    "கையில் மோதிரத்தை கொண்டிருக்கும் பெண் இன்னொருவருக்கு சொந்தமானவன் என்பதை குறிக்கும் நிச்சயதார்த்த மோதிரம் பெண்ணியத்துக்கு எதிரானது என்று கருதுகிறேன்" - மட்டில்டே

    மேலும் படிக்க திருமணம்
  • சமூக வலைதளம்

    "இது இளைஞர்களுக்கு, குறிப்பாக இளம் பெண்களின் மன நலத்திற்கு பெரும் பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடியது. அவர்கள் தொடர்ந்து நம்பமுடியாத மற்றும் ஆபத்தான கொள்கைகளை எதிர்நோக்குகின்றனர்." - ரோஷன்

    மேலும் படிக்க சமூக வலைதளம்
  • பொம்மைகள்

    "பாலின வேறுபாடுடைய பொம்மைகள் சிறுவர், சிறுமியர் குறிப்பிட்ட பொருட்களை மட்டுமே விரும்ப வேண்டுமென்று கூறுகின்றன." - அண்ணா

    மேலும் படிக்க பொம்மைகள்
  • வேறேதாவது

    பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறையாக எது பார்க்கப்படுகிறது? பிரீடம் ட்ராஷ்கேன் திட்டத்தின் கருத்தாக்கத்தை தெரிந்துகொண்டு, நீங்கள் உங்களது பரிந்துரையை அளியுங்கள்.

    மேலும் படிக்க வேறேதாவது

இதேவேளையில், தங்களின் கருத்துக்களை வெளிப்படுத்த இதுவொரு கருவியாக இருப்பதாகவும், தனிமையாக இருக்கின்றவர்கள் தங்களின் உணர்வுகளை வெளிப்படுத்த உதவுவதாகவும் சமூக ஊடகங்களின் நேர்மறை அம்சங்களையும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

பாலியல் தாக்குதல் பற்றி பல பெண்கள் முன்வந்து பேச தொடங்கிய #MeToo இயக்கம், சமூக ஊடகங்களில் தொடங்கிய போராட்டமாகும். ஆன்லைனில் பெண்கள் தங்களின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை பகிர தொடங்கியபோது, இதுவொரு சர்வதேச பேச்சுப்பொருளாக மாறியது.