பா.ஜ.க தலைவிதியை மாற்றிய 'நோட்டா' மற்றும் பிற செய்திகள்

பிரசுரிக்கப்பட்டது

பா.ஜ.க தலைவிதியை மாற்றிய 'நோட்டா'

பா.ஜ.க

பட மூலாதாரம், STRDEL

மத்திய பிரதேசத்தில் கடந்த 15 ஆண்டுகளாக ஆட்சிக்கட்டிலில் அமர்ந்திருந்த பா.ஜ.க நூலிழையில் வெற்றியை பறிகொடுத்ததற்கு முக்கிய காரணியாக இருந்தது.

மத்திய பிரதேச சட்டமன்றத் தேர்தல் முடிவில், பா.ஜ.க பெற்ற வாக்குகளின் சதவீதம் 41%. காங்கிரஸ் 40.9%. காங்கிரஸ் கட்சியை காட்டிலும் கூடுதல் சதவீத வாக்குகளை பா.ஜ.க பெற்றபோதிலும் அதனால் ஆட்சியமைக்க முடியாமல் போனது.

Presentational grey line

ஒரே பெண் முதலமைச்சர்

பெண் முதலமைச்சர்

பட மூலாதாரம், AFP

ஐந்து மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் பல விஷயங்களை புரட்டிப்போட்டுவிட்டன. இந்தியாவின் 29 மாநிலங்களில் ஒரே ஒருவர்தான் பெண் முதலமைச்சர் என்பதும் தேர்தல் ஏற்படுத்திய மாற்றம்தான்.

ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் பதவி, வசுந்தரே ராஜேவிற்கு கைநழுவிப் போனதால், தற்போது மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பேனர்ஜி மட்டுமே இந்தியாவின் ஒரே பெண் முதல்வர் என்று நிலைமை மாறிவிட்டது.

Presentational grey line

சாதிக்கொரு மரபணு: அமைச்சர் விளக்கமும், அறிவியல் உண்மையும்

மாஃபா பாண்டியராஜன்

பட மூலாதாரம், facebook

ஒவ்வொரு சாதிக்கும் ஒரு மரபணு உள்ளது என்பதற்கு அறிவியல் ஆதாரங்கள் உள்ளதாக தமிழக தொல்லியல் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

''பொதுவான பாரம்பரியம் மற்றும் வரலாறு ஆகியவற்றை கொண்டுள்ள ஒரு குழுவைச் சேர்ந்த நபர்களுக்கு ஒரே விதமான பண்புக்கூறுகள்(traits) இருக்கவாய்ப்புள்ளது என பல அறிவியல் ஆராய்ச்சிகள் கூறுகின்ற என பாண்டியராஜன் கூறினார்.

உண்மையில் ஒவ்வொரு சாதிக்கும் ஒரு டி.எம்.ஏ இருக்கிறதா என கேட்டபோது சாதி ரீதியாக மரபணுக்கள் இருப்பதில்லை என்பதோடு, சூழலே ஒரு மனிதனின் தன்மையை உருவாக்குகிறது என்றார் மருத்துவர் எழிலன்.

Presentational grey line

ரணிலுக்கு வாக்களிக்காதது ஏன்? - தமிழ்தேசியக் கூட்டமைப்பு எம்.பி. சிவசக்தி ஆனந்தன்

சிவசக்தி ஆனந்தன்

பட மூலாதாரம், facebook

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வினைப் பெற்றுக் கொள்வதை உறுதிப்படுத்துவதற்கான எந்தவித நிபந்தனைகளையும் விதிக்காமல், ரணில் விக்ரமசிங்கவுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளிக்க முன்வந்ததால்தான், நேற்றைய தினம் நாடாளுமன்றில் ரணில் விக்ரமசிங்கவுக்கு பெரும்பான்மையினை நிரூபிக்கும் யோசனையின் அடிப்படையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், தான் கலந்து கொள்ளவில்லை என்று, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பி்னர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்; "ரணில் விக்ரமசிங்கவும், மைத்திரிபால சிறிசேனவும் தமிழ் மக்களுக்கு வழங்கிய எந்தவித வாக்குறுதிகளும், இந்த அரசாங்கத்தின் மூன்றரை வருடத்திலும் நிறைவேற்றப்படவில்லை," என்றார்.

Presentational grey line

சௌதிக்கு ஆயுத உதவியை நிறுத்த தீர்மானம்

சௌதி

பட மூலாதாரம், Reuters

பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜி கொலை சம்பவத்தில் சௌதி அரேபியாவை குற்றஞ்சாட்டும் வகையில், யேமனில் நடந்து வரும் போரில் அந்நாட்டுக்கான ராணுவ உதவியை திரும்ப பெறும் தீர்மானத்திற்கு ஆதரவாக அமெரிக்க செனட் சபை வாக்களித்துள்ளது.

அமெரிக்காவில் நடைமுறையில் உள்ள '1973 போர் அதிகாரங்கள்' சட்டத்தை பயன்படுத்தி நிறைவேற்றப்பட்ட முதல் வாக்கெடுப்பு இதுவாகும்.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் நிர்வாகம், இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் சௌதியுடனான உறவு பாதிக்கப்படும் என்று தெரிவித்தாலும், அவர்களது குடியரசு கட்சியை சேர்ந்தவர்களே தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்க 56-41 என்ற கணக்கில் அந்நாட்டு வரலாற்றில் முதல் முறையாக அதன் வெளிநாட்டு ராணுவ செயல்பாடு முடக்கப்படுவதற்கான வாய்ப்பு உண்டாகியுள்ளது.

Presentational grey line