இரான் ஆயத்துல்லா அலி காமனெயிக்கு என்ன ஆனது? அடுத்த அதி உயர் தலைவர் யார்?
பிரசுரிக்கப்பட்டது
இரானின் அதிஉயர் தலைவரான ஆயத்துல்லா அலி காமனெயியின் உடல்நிலை குறித்து வெளிவரும் சமீபத்திய வதந்திகள், அவர் ஆட்சி செய்ய முடியாத அளவுக்கு நோய்வாய்ப்பட்டாலோ இறந்துவிட்டாலோ என்ன நடக்கும் என்பது குறித்த கேள்வியை எழுப்பியுள்ளது.
81 வயதான ஆயத்துல்லா அலி காமனெயி ,மத்திய கிழக்கின் மிக சக்தி வாய்ந்த நாடுகளில் ஒன்றான இரானின் மிக அதிக அரசியல் அதிகாரம் கொண்டவர். அதனால் அவருக்குப் பின் அவரது பதவிக்கு யார் வருவார் என்பது இரானுக்கு மட்டுமின்றி அந்த பிராந்தியம் மற்றும் உலகின் பிற பகுதிகளுக்கும் மிகவும் முக்கியமானது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: