ஜெயலலிதாவின் உடல் நலத்தில் தொடர்ந்து முன்னேற்றம் - அப்போலோ
பிரசுரிக்கப்பட்டது
சென்னை கிரீம்ஸ் சாலையிலுள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழ் நாட்டின் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல் நலம் தொடர்ந்து முன்னேறி வருகிறது என்று மருத்துவமனை நிர்வாகம் செய்தி வெளியிட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
அவருடைய நோய் தொற்றுக்கு பொருத்தமான ஆன்டிபயாடிக், மூச்சுவிட உதவுகின்ற கருவிகள் மற்றும் பிற சிகிச்சை நடவடிக்கைகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன.
முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு வழங்கப்படும் ஒருங்கிணைந்து சிகிச்சைக்கு ஏற்ப அவரது உடல் நலத்தில் முன்னேற்றம் தெரிகிறது.
மருத்துவர்கள் அணி ஒன்று அவருக்கு வழங்கப்படும் சிகிச்சையை கண்காணித்து வருகிறது.
சிகிச்சைக்காக முதலைமைச்சர் இன்னும் மருத்துவமனையில் தங்கியிருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அப்போலோ மருத்துவமனை தெரிவிக்கிறது,




























