மோடியின் வெற்றிப் பயணம்: தடுக்க முடியாமல் எதிர்க்கட்சிகள்

பிரசுரிக்கப்பட்டது

இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில், பாரதீய ஜனதா கட்சி பெற்றுள்ள மிகப்பெரிய வெற்றி, பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியின் மீதான மக்களின் தீர்ப்பாகவே பார்க்கப்படுகிறது.

இந்திய பிரதமர் நரோந்திர மோடி

பட மூலாதாரம், Kevin Frayer/Getty Images

தலைநகர் டெல்லியை அடுத்துள்ள உத்தரப் பிரதேசம், 80 நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கிறது. சட்டப்பேரவை உறுப்பினர்கள் 403 பேர்.

முதலமைச்சர் வேட்பாளர் யாரையும் பாரதீய ஜனதா அறிவிக்கவில்லை. மோடிதான், பிரசாரத்தின் மையமாக இருந்தார்.

பாரதீய ஜனதாவுக்கு வலிமையான எதிர்க்கட்சி கூட்டணி என்று பார்க்கப்பட்ட சமாஜவாதி - காங்கிரஸ் கூட்டணி, மாயாவதியின் பகுஜன் சமாஜ கட்சிக்கு எதிராக, வளர்ச்சியை மையமாகக் கொண்டு மோடி கடுமையான பிரசாரத்தை மேற்கொண்டார்.

இந்த வெற்றி பாரதீய ஜனதாவுக்கு என்ன அர்த்தத்தை கொடுக்கிறது?

அதிகாரம், தற்போது பாரதீய ஜனதாவின் பக்கம் வலுவாகச் சாய்ந்திருக்கிறது.

தேர்தல் வெற்றி கொண்டாட்டம்

பட மூலாதாரம், Getty Images

சமூக ஒருங்கிணைப்பு என்று சொல்லக்கூடிய, நடுத்தர வகுப்பு, பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர், உயர் சாதியினர் என அனைத்துத் தரப்பினரையும் வெற்றிகரமாக ஒருங்கிணைக்கும் பணியை பாரதீய ஜனதா செய்திருப்பதாகப் பார்க்கப்படுகிறது.

"சாதி அரசியலைத் தாண்டி மக்களின் நம்பிக்கை பெற்றுள்ளார் மோடி. களத்தில், பாரதீய ஜனதா சாதிக் கட்சியாகப் பார்க்கப்படவில்லை" என்று கொள்கை ஆய்வு மையத்தின் பானு ஜோஷி கூறுகிறார்.

மேலும், உயர் மதிப்பு ரூபாய் நோட்டுக்கள் மதிப்பு நீக்கத்தால் நடுக்கத்தில் இருந்த பாரதீய ஜனதா கட்சி இந்த முடிவால் ஊக்கம் பெற்றிருக்கிறது.

அடுத்து, தனது முதல் ஆட்சிக் காலத்தின் மத்தியில், 2019-ம் ஆண்டு மக்களவை பொதுத் தேர்தலுக்கு முதன்மை வேட்பாளராக தன்னை முன்னிறுத்திக் கொண்டிருக்கிறார் மோடி.

இன்னொரு காரணம், எதிர்க்கட்சியின் பலவீனமான நிலை. பஞ்சாப்பில் வெற்றி பெற்றிருந்தாலும், உத்தரப் பிரதேசத்தில் வீழ்ந்து பல காலம் ஆன பிறகும் அதனால் எழுந்து நிற்க முடியவில்லை.

தேர்தல் வெற்றியால் ஹோலி மகிழ்ச்சி

பட மூலாதாரம், Getty Images

ஆம்-ஆத்மி

டெல்லியில் ஆட்சியில் இருக்கும் ஆம்-ஆத்மி கட்சி, பஞ்சாப் மற்றும் கோவாவில் வெற்றிபெற முடியாமல் போனதால், அது தேசிய இலக்கை நோக்கிய பயணத்தில் பின்னடைவைச் சந்தித்திருக்கிறது.

இன்னொரு புறம், பாரதீய ஜனதாவின் வெற்றி, நாடாளுமன்ற மாநிலங்களவையில் அது பலம் பெற்று, பல முக்கிய மசோதாக்களை எளிதாக நிறைவேற்றிவிட முடியும் என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்.

மேலும், மக்களுடன் மோடிக்கு உள்ள அந்த நெருக்கம், இன்னும் மங்காமல் இருக்கிறது.

பதாகை

பட மூலாதாரம், Getty Images

எதிர்க்கட்சிகள், மோதியை எதிர்கொள்ள, மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தும் புதிய அணுகுமுறை இல்லாமல் செயல்படுவதுதான் அவர்களின் முக்கியப் பிரச்சினையாக இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

ஆனால், எதிர்பார்ப்பது நடக்காமல் போவதும், எதிர்பாராத பல திருப்பங்கள் ஏற்படுவதும்தான் அரசியல். 2004-ம் ஆண்டு, பலமான தலைவராகப் பார்க்கப்பட்ட பாரதீய ஜனதா கட்சியின் வாஜ்பாய், 2004-ஆம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் கட்சியிடம் தோற்றது அதற்கு உதாரணமாகப் பார்க்கப்படுகிறதது.

ஆனல், 2017-ல் நரேந்திர மோதியின் ஆதிக்கம் உச்சத்தில் இருக்கிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்