’பொருளாதார குற்றங்களில் ஈடுபடுவோரின் சொத்துக்களை பறிமுதல் செய்யும் மசோதா’

பிரசுரிக்கப்பட்டது

முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வந்த செய்திகள் மற்றும் தலையங்கம் ஆகியவற்றை தொகுத்து வழங்குகிறோம்.

தினமணி

இந்தியாவில் பொருளாதாரக் குற்றங்களில் ஈடுபட்டுவிட்டு, வெளிநாடுகளுக்கு தப்பிவிடும் மோசடியாளர்களின் அனைத்து சொத்துகளையும் பறிமுதல் செய்ய வழிவகுக்கும் புதிய மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை வியாழக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.

'பொருளாதார குற்றங்களில் ஈடுபடுவோரின் சொத்துக்களை பறிமுதல் செய்யும் மசோதா'

பட மூலாதாரம், Getty Images

இதே போல் தவறிழைக்கும் தணிக்கையாளர்களைக் கண்காணிக்க தேசிய நிதிச் செயல்பாடுகள் கண்காணிப்பு ஆணையத்தை ஏற்படுத்தவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என தினமணி பிரதான செய்தி வெளியிட்டுள்ளது.

Presentational grey line

தினமலர்

மதவாத சக்தியை வீழ்த்த அதிமுக, திமுக இரண்டு கட்சிகளும் தேவை என திருமாவளவன் கூறியது குறித்து தினமலரில் வெளிவந்துள்ள கார்ட்டூன்

நாளிதழ்களில் இன்று:

பட மூலாதாரம், Thinamalar

Presentational grey line

டைம்ஸ் ஆஃப் இந்தியா

கடந்த ஐந்து வருடங்களில் இல்லாத அளவில் சென்னை குளிர்காலத்தை சந்தித்து வருவதாக வானிலை மைய தகவல் அறிக்கை கூறுவதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

'பொருளாதார குற்றங்களில் ஈடுபடுவோரின் சொத்துக்களை பறிமுதல் செய்யும் மசோதா'

பட மூலாதாரம், Getty Images

சராசரியாக ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதத்தில் இரவு நேரத்தின் வெப்பநிலை 22டிகிர் செல்ஷியஸாக பதிவாகியுள்ளது எனவும் அந்த செய்தி கூறுகிறது.

Presentational grey line

இந்தியன் எக்ஸ்பிரஸ்

ஐஎன்எக்ஸ் முறைகேடு விவகாரம் தொடர்பாக கைதான முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தை ஐந்து நாட்கள் சிபிஐ காவலில் வைக்க டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸில் செய்தி வெளியாகியுள்ளது

'பொருளாதார குற்றங்களில் ஈடுபடுவோரின் சொத்துக்களை பறிமுதல் செய்யும் மசோதா'

பட மூலாதாரம், படத்தின் காப்புரிமைKARTI P CHIDAMBARAM FACEBOOK

”அதிர்ச்சியூட்டக்கூடிய பல்வேறு ஆதாரங்கள்” கார்த்தி சிதம்பரத்திற்கு எதிராக இருப்பதாக மத்திய அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தெரிவித்தார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :