எட்டு வழிச்சாலை: ஆர்ப்பாட்டம் செய்த ஆயிரத்துக்கு மேற்பட்ட திமுகவினர் கைது

பிரசுரிக்கப்பட்டது

எட்டு வழிசாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சேலத்தில் தி,மு,க.வினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, ஸ்டாலின் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யபட்டனர்.

எட்டு வழிச்சாலை எதிர்த்துப் போராட்டம்: சேலம் திமுக பேரணி
படக்குறிப்பு, எட்டு வழிச்சாலை எதிர்த்துப் போராட்டம்: சேலம் திமுக பேரணி

சேலம்-சென்னை இடையில் பசுமை வழிசாலை அமைக்கும் திட்டம் மற்றும் விமான நிலைய விரிவாக்க திட்டம் ஆகியவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்து சேலம் மாவட்ட ஆட்சிதலைவர் அலுவலகம் எதிரில் தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தபட்டது. தி.மு.க. துணை பொது செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

தங்கள் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் என்று வலியுறுத்தி ஏர் கலப்பை பூட்டிய மாடுகள் மற்றும் விளைபொருட்களுடன் விவசாயிகள் சிலர் ஆர்பாட்டத்தில் பங்கேற்றனர். ஆர்பாட்டத்தின் போது பேசிய சுப்புலட்சுமி ஜெகதீசன், தமிழகத்தில் மதுரவாயல் துறைமுக சாலை திட்டம் உள்பட கிடப்பில் போடப்பட்ட திட்டங்களை நிறைவேற்ற மாநில அரசு முன்வராதது ஏன் என்று கேள்வி எழுப்பினார். மேலும், பொருளாதார வளர்ச்சி தரும் சேது சமுத்திர திட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றினால் தி.மு.க. பாராட்டும் என்றும் தெரிவித்தார்.

திமுக போராட்டம்.

இதனிடையே, சென்னையில் தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து தி.மு.க.வினர் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் காரணமாக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலை , பெரியார் மேம்பாலம் உள்ளிட்ட பகுதிகளில் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :