அன்னையர் தினம்: தாய்க்கு கோயில் கட்டி வழிபடும் நாமக்கல் சகோதரர்கள்
பிரசுரிக்கப்பட்டது
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நாமகிரிப்பேட்டை அருகே உள்ள காட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் வக்கீல் முருகேசன். இவரது தம்பி பச்சமுத்து. இருவரும் விவசாயம் செய்து வருகின்றனர்.
கடந்த 3 வருடங்களுக்கு முன்பு இவர்களது தாயார் அலமேலு (72) இறந்துவிட்டார். தாயின் மீது அளவற்ற பாசம் வைத்திருந்த முருகேசன் மற்றும் இவரது தம்பி பச்சமுத்து தாய் இறந்த சோகத்தில் மனம் நொடிந்து போயினர். மன அமைதிக்காக கோயில், கோயிலாக சென்று வந்தனர்.
இந்த நிலையில்தான் அண்ணன் தம்பி இருவரும் தங்களது தாய்க்கு கோயில் கட்ட முடிவு செய்தனர். இதையொட்டி அவர்களது தோட்டத்தின் ஒரு பகுதியில் கருங்கற்களால் கோயில் கட்டினர். கருவறையில் 2 3/4 அடி உயரத்தில் அவரது தாயாரின் முக வடிவில் கருங்கல் சிலை அமைத்தனர்.
தயாரிப்பு: ஏ.எம். சுதாகர்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்