கடிதம் எழுதி வைத்துவிட்டு, ஆன்லைனில் ரம்பம் வாங்கி குடும்பத்தைக் கொன்ற ஐடி ஊழியர்

காணொளிக் குறிப்பு, ஆன்லைனில் ரம்பம் வாங்கி குடும்பத்தைக் கொன்ற ஐடி ஊழியர்
பிரசுரிக்கப்பட்டது

சென்னை பல்லாவரத்தில், மனைவி மற்றும் தனது இரண்டு பிள்ளைகளைக் கொலை செய்துவிட்டு கணவரும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

தனியார் நிறுவன ஊழியரான பிரகாஷ், தனது மனைவி, 13 வயது மகள், 8 வயது மகன் ஆகியோருடன், பல்லாவரத்தை அடுத்த பொழிச்சலூரில் வசித்து வந்தார். கடந்த 19ஆம் தேதி வலைதள வர்த்தக நிறுவனம் ஒன்றில், பேட்டரியில் இயங்கக்கூடிய மரம் அறுக்கும் ரம்பம் ஒன்றை விலை கொடுத்து வாங்கியுள்ளார் பிரகாஷ்.

வெள்ளிக்கிழமை நள்ளிரவு, அந்த ரம்பத்தால், தன் மனைவி மற்றும் இரு குழந்தைகளை, கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு, அதே ரம்பத்தால் தனது கழுத்தைத் தானே அறுத்துக் கொண்டு உயிரிழந்திருக்கிறார்.

அதோடு, இந்தச் சம்பவத்திற்கு யாரும் காரணம் அல்ல. இது, தானும் தனது மனைவியும் சேர்ந்து எடுத்த முடிவு என ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்த கடிதம் ஒன்று, அந்த வீட்டின் சுவற்றில் ஒட்டப்பட்டிருந்ததாக, காவல்துறையினர் தெரிவித்தனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: