கொரோனா வைரஸ்: செல்பேசி திரையில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
பிரசுரிக்கப்பட்டது
கோவிட்-19 வைரஸ் தொற்று பணத்தாள்கள், செல்பேசி திரைகள் மற்றும் துருவுறா எஃகு (ஸ்டெயின்லெஸ் ஸ்டீல்) போன்றவற்றின் பரப்புகளில் 28 நாட்கள் உயிர்ப்புடன் இருக்கக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
ஆஸ்திரேலியாவின் தேசிய அறிவியல் அமைப்பு மேற்கொண்டுள்ள இந்த ஆய்வின் மூலம், கொரோனா வைரஸ் தாங்கள் நினைத்ததை விட நீண்ட காலம் தொற்றும் தன்மையுடன் இருக்க முடியும் என்று தெரியவந்துள்ளதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இருப்பினும், இந்த ஆய்வானது இருட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. புறஊதா கதிர்களை கொண்டு இந்த வைரஸை அழிக்க முடியுமென்பது ஏற்கனவே கூறப்பட்டுள்ளது.
சில வல்லுநர்கள், நிஜ வாழ்க்கையில் இதுபோன்ற மேற்பரப்புகளில் காணப்படும் வைரஸ் பரவுவதால் ஏற்படும் உண்மையான அச்சுறுத்தல் குறித்த சந்தேகத்தையும் எழுப்பியுள்ளனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: